Published : 15 May 2014 10:00 AM
Last Updated : 15 May 2014 11:40 AM
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை கொல்லத் திட்டமிட்டவருக்கு அமெரிக்காவின் தெற்கு டகோடா மாநில நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. ஜேம்ஸ் மெக்வே (44) என்ற இந்நபர், கடந்த 2011-ம் ஆண்டு 75 வயது பெண்மணி ஒருவரை கொலை செய்துவிட்டு அவரது காரை திருடிச் சென்றார். பின்னர் மெக்வே, விஸ்கான்சின் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், “வாஷிங்டன் சென்று அதிபர் ஒபாமாவை கொலை செய்யும் திட்டத்துடன் காரை திருடினேன்” என்றார் மெக்வே. இவர் மீதான வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு கூறப்பட்டது. இதில் மெக்வேவுக்கு மரண தண்டனை அளித்து நீதிபதிகள் ஒருமனதாக தீர்ப்பளித்தனர்.
நீதிபதிகளில் ஒருவர் மாறுபட்ட கருத்தை கூறியிருந்தால், மெக்வேவுக்கு பரோல் சலுகை இல்லாத ஆயுள் தண்டனை கிடைத்திருக்கும். ஆனால் அவ்வாறு யாரும் கூறவில்லை. எனினும் மெக் வேவுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை தெற்கு டகோடா மாநில உச்ச நீதிமன்றம் உறுதி செய்யவேண்டும்.