Published : 14 Aug 2014 07:19 PM
Last Updated : 14 Aug 2014 07:20 PM
மேஷ ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும் 6-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். தோற்றப்பொலிவு கூடும். புதிய பதவி, பட்டங்கள் சிலருக்கு இப்போது கிடைக்கும். புதிய வாகனம் வாங்க வாய்ப்புக்கூடிவரும். கலைத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். பயணத்தால் முக்கியமானதொரு காரியம் நிறைவேறும்.
17-ம் தேதி முதல் சூரியன் ஐந்தாம் இடத்திற்கு மாறினாலும் தன் சொந்த ராசியில் உலவுவதால் மக்களால் ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். அரசுப்பணியாளர்களுக்கு அனுகூலமான சூழ்நிலை உதயமாகும். நிர்வாகத்திறமை வெளிப்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 14, 15, 20.
திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: வெண்மை, இளநீலம், வெளிர்கறுப்பு.
எண்கள்: 4, 6.
பரிகாரம்: கணபதி ஜபம், ஹோமம் செய்வது நல்லது.
ரிஷப ராசி வாசகர்களே!
உங்கள் ஜன்ம ராசிக்கு 3-ல் சூரியனும் சுக்கிரனும் 4-ல் புதனும் 6-ல் செவ்வாயும் சனியும் 11-ல் கேதுவும் உலவுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். மன உறுதி உண்டாகும். நல்ல தகவல் வந்து சேரும். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். வியாபாரம் பெருகும். மாணவர்களது திறமை வெளிப்படும்.
3-ல் குருவும் 5-ல் ராகுவும் உலவுவதால் மக்கள் நலனில் கவனம் தேவை. பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. பிறரால் ஏமாற்றப்பட நேரலாம். 17-ம் தேதி முதல் சூரியன் நான்காம் இடம் மாறினாலும் தன் சொந்த வீட்டில் உலவத் தொடங்குவதால் புதிய சொத்துக்கள் சேர வழிபிறக்கும். அலைச்சல் வீண்போகாது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 14, 15, 20.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, மெரூன், வெண்மை, பச்சை, நீலம், சிவப்பு.
எண்கள்: 1, 5, 6. 7, 8, 9.
பரிகாரம்: துர்க்கை அம்மனையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். ஏழைப் பெண்களுக்கும், வேத விற்பன்னர்களுக்கும் உதவி செய்யவும்.
மிதுன ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் சுக்கிரனும் 10-ல் கேதுவும் உலவுவதால் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். குடும்ப நலம் சிறக்கும். மனமகிழ்ச்சி கூடும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். ஆன்மிக, அறப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் அனுகூலம் உண்டாகும்.
கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். 17-ஆம் தேதி முதல் சூரியன் மூன்றாம் இடத்திற்கு மாறி, வலுப்பெறுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாகும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். 4-ல் ராகுவும், 5-ல் சனி, செவ்வாயும் உலவுவதால் அலைச்சல் கூடும். மக்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். கர்ப்பிணிப் பெண்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. புதன்பலம் குறைந்திருப்பதால் வியாபாரிகள் அகலக்கால் வைக்க வேண்டாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 14, 15, 20.
திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: இளநீலம், வெண்மை, மெரூன், பொன் நிறம், மஞ்சள்.
எண்கள்: 3, 6, 7.
பரிகாரம்: துர்க்கையையும், முருகனையும் வழிபடவும். விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது நல்லது. ஏழை மாணவர்கள் கல்வி கற்க உதவி செய்யவும்.
கடக ராசி வாசகர்களே!
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 2-ல் புதனும் 3-ல் ராகுவும் உலவுவதாலும் குரு ஜன்ம ராசியில் இருந்தாலும் அவரது பார்வை 5, 7, 9-ம் இடங்களில் பதிவதாலும் புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். எடுத்த காரியங்களை நிறைவேற்றி வருவீர்கள். கலைஞானம் கூடும். நண்பர்கள், உறவினர்களது சந்திப்பு நலம் தரும். புதியவர்களது தொடர்பும் கிட்டும்.
அனுகூலம் உண்டாகும். பயணத்தால் குறிப்பிட்டதொரு எண்ணம் நிறைவேறும். 4-ல் செவ்வாயும் சனியும் இருப்பதால் தாய் நலனில் கவனம் தேவை. சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுங்கள். 17-ம் தேதி முதல் சூரியன் இரண்டாம் இடத்திற்கு மாறுவதால் பண வரவு சற்று அதிகரிக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 14, 15, 20.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: வெண்மை, சாம்பல் நிறம், பச்சை, இளநீலம்
எண்கள்: 4, 5, 6.
பரிகாரம்: சனிப் பிரீதி செய்வது நல்லது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யவும்.
சிம்ம ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும் சனியும் 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்களின் சேர்க்கை, ஆதாயம் கிடைக்கும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.
கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். குரு 12-ல் இருப்பதால் மக்கள் நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். மறதி ஏற்படும். 17-ம் தேதி முதல் சூரியன் உங்கள் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதால் உடல்நலம் சீராகும். மதிப்பு உயரும். 2-ல் ராகுவும் 8-ல் கேதுவும் உலவுவதால் முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை நம்பி ஏமாற வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியமாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 19, 20.
திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, மேற்கு.
நிறங்கள்: நீலம், சிவப்பு, வெண்மை .
எண்கள்: 6, 8, 9.
பரிகாரம்: நாகரை வழிபடவும். கணபதிக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும்.
கன்னி ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 11-ல் சூரியனும் குருவும் சுக்கிரனும் உலவுவதால் வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புகள் கூடிவரும். நல்லவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்தி தரும். முக்கியஸ்தர்களது சந்திப்பு நலம் தரும். தந்தையாலும் மக்களாலும் அனுகூலம் உண்டாகும்.
செவ்வாய், சனி, ராகு, கேது, புதன் ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் இயந்திரப்பணியாளர்கள், விவசாயிகள், போக்குவரத்துத் துறைகளைச் சேர்ந்தவர்கள், வியாபாரிகள் ஆகியோருக்கெல்லாம் பிரச்னைகள் சூழும். வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது அவசியம். 17-ம் தேதி முதல் சூரியன் 12-மிடம் மாறுவது சிறப்பாகாது. இடமாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 14, 15 (பகல்), 20.
திசைகள்: கிழக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, இளநீலம், ஆரஞ்சு, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 6.
பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரையும் ரங்கநாயகியையும் வழிபடவும். ஏழை, எளியவர்களுக்கும் வயோதிகர்களுக்கும் உதவி செய்யவும்.