Published : 23 Apr 2014 09:20 AM
Last Updated : 23 Apr 2014 09:20 AM
ரூ.100-க்கும், பீர்-க்கும், சோறுக்கும் வாக்களிக்காமல், தொகுதி யின் வளர்ச்சியை மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களை பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக் கொண்டார்.
சென்னை பெரவள்ளூர் சதுக்கத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த இறுதிகட்டப் பிரச்சாரத்தில் வடசென்னை தேமுதிக வேட்பாளர் சவுந்தரபாண்டியன், மத்திய சென்னை தேமுதிக வேட்பாளர் ரவீந்திரன் ஆகியோரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பேசிய தாவது:
தமிழகத்தில் வேதனை ஆட்சி தான் நடக்கிறது. சாதனை ஆட்சி யாக இல்லை. தோல்வி பயத்தில் தான் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் வந்துள்ளது. தோல்வி பயத்தில் திமுகவும், அதிமுகவும் ரூ.200, ரூ.300 கொடுத்து வாக்காளர் களைக் கவர முயற்சிக்கின்றன. ரூ.100-க்கும், பீர்-க்கும், சோறுக் கும் வாக்களிக்காமல், தொகுதி வளர்ச்சியை மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என்று உங் களை கேட்டுக் கொள்கிறேன்.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந் ததும் தமிழகத்தில் தடையில்லா மின்சாரம், நதிகள் இணைப்பு மூலம் மக்களுக்கு குடிநீர், விவசாயம் மற்றும் தொழிற் சாலைகளுக்குத் தேவையான தண்ணீர், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்கும். தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் பாதுகாப்புக்கு உறுதி செய்யப்படும் என்றும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தையும், குஜராத்தை யும் ஒப்பிட்டு முதல்வர் ஜெய லலிதா பேசியுள்ளார். குஜராத்தில் மின்வெட்டே கிடையாது. தமிழகத் தில் அடிக்கடி மின் தடை. குஜராத்தில் பூரண மதுவிலக்கு. தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடை கள் இல்லாத தெருவே இல்லை. குஜராத்தில் நர்மதா நதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் அமைத்து வறண்ட பூமியை வளமான பூமி ஆக்கியிருக்கிறார் நரேந்திர மோடி. அங்கு இலவசங்கள், லஞ்ச, ஊழல் இல்லை. தமிழகத்தில் அதெல்லாம் இருக்கிறது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
மூன்றே மாதத்தில் மின் தட்டுப் பாட்டைப் போக்குவேன் என்றார் ஜெயலலிதா. மூன்று ஆண்டுகளா கியும் மின் தட்டுப்பாட்டு பிரச் சினைக்கு தீர்வு காணப்படவில்லை.
தமிழகத்தில் 5 முனைப்போட்டி இருப்பதால், ஒவ்வொருவரின் வாக்கும் மிக முக்கியமானது. இத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் 40 பேரும் வெற்றி பெறும் வகையில் புரட்சிகரமான தீர்ப்பைத் தந்து, திமுக, அதிமுகவுக்கு விடை கொடுக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.