

திருஞானசம்பந்தர் அருளிய தேவார மழைப் பதிகத்தை, மேகராகக்குறிஞ்சி என்ற பண் ணில் பாடி, வேண்டினால் நிச்சயம் மழை கிடைக்கும் என்கிறார்கள் நெல்லை ஞான வேள் விக் குழுவினர்.
குழுவின் ஒருங்கிணைப்பா ளர் கி.சவுந்தரராசன், யு.ஆர்.சி.தேவராசன், சு.தங்கப்பழம், ராமராசா, சிவராமன், ஓதுவார் சங்கரநாராயணன், சிவஞானம் இந்த குழுவில் இருக்கிறார்கள்.
பிரசித்திபெற்ற குற்றாலம் குற்றால நாதசுவாமி கோயிலில் தினமும் காலையில் 1 மணி நேரத்துக்கு மழை வேண்டி பதிகம் பாடும் பணியை இக்குழுவினர் மேற்கொள்கிறார்கள். தமிழகத்தில் பல்வேறு தலங்களி லும் அழைப்பின்பேரில் சென்று பதிகம் பாடும் அறப்பணியை இக்குழு மேற்கொள்கிறது. இக்குழுவினர் மழை பதிகம் பாடியுள்ள பல்வேறு பகுதிகளிலும், உடனுக்குடன் மழை பெய்த அதிசயமும் நிகழ்ந்திருக்கிறதாம்.
சவுந்தரராசன் கூறும்போது, ``தமிழக வழிபாட்டுத் தலங்கள் அனைத்திலும் மாலையில், பிரதோஷ வேளையில் 5 மணி முதல் 6.30 மணி வரை ஒன்றரை மணி நேரம் தேவார மழை பதிகத்தை மேகராக குறிஞ்சி பண்ணில் பாட ஏற்பாடு செய்ய வேண்டும். தொடர்ந்து, 12 நாட் கள் இப்பதிகத்தைப் பாடினால், அப்பகுதியில் இறையருளால் மழை பெய்யும்.
கடந்த 21.2.2011 முதல் 4.3.2011 வரை வாசுதேவநல்லூர் அருள்மிகு சிந்தாமணிநாத சுவாமி திருக்கோயிலில் தெப் பம் பெருக பாட ஆரம்பித்த மறுநாளில் இருந்து 3 நாட்களுக்கு மழை பெய்தது. நிறைவுக்குப் பின் 9-ம் நாள் பெய்த மழை யால் தெப்பம் பெருகியது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி தொடங்கி கரூர், திருப்பாராய்த்துறை, திருவையாறு, சிதம்பரம், சீர்காழி, திருப்பறியபூர், திருமுதுகுளம், திருவண்ணாமலை தலங்களில் மழை பதிகம் பாட திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
ஓதுவார் சங்கரநாராயணன் கூறும்போது, ``2011 முதல் பல ரின் உதவியைப் பெற்று மழை வேண்டி, இந்த வேள்வியை நடத்துகிறோம். பல நூற்றாண்டுகளுக்குமுன் பெரிய ஆதீனங்களில் ஓதுவார்கள் இதுபோன்ற பதிகங்களை பாட ஏற்பாடு செய்யப்பட்டு, மழை பெய்திருக்கிறது. அந்த நம்பிக்கையுடன்தான், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மழைக் காக ஞான வேள்வியில் ஈடுபடுகிறோம்” என்றார்.
மழையை, பதிகம் பாடி மழை வரவைப்பது ஆச்சரியம் என்றாலும், மழை எப்போதும் நமக்கு அவசியமானதாகவே இருக்கிறது. வரட்டும்.