Last Updated : 26 Nov, 2018 08:40 AM

 

Published : 26 Nov 2018 08:40 AM
Last Updated : 26 Nov 2018 08:40 AM

மாற்றத்தின் தூதர்கள்! 

‘கஜா புயலால் மரங்களைத் தான் வீழ்த்த முடிந்தது. மனிதத்தை அல்ல.’ முன்பின் அறிமுகமில்லாத மனிதர்களின் துயர்துடைக்க இரவு பகல் பாராமல் உணவு உறக்கம் மறந்து ‘களத்தில் நிற்கிறார்கள்’ அடையாளமற்ற ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள்.

ஒரு விளக்கைக் கொண்டு ஆயிரம் விளக்குகளை ஏற்றி ஒளி பரவச் செய்யமுடியும் என்பதை ‘இயற்கைப் பேரிடர்’ மீட்புப் பணிகளில் ஈடுபடும் தன்னார்வலர்கள் உறுதி செய்கின்ற னர். இவர்கள் தங்களின் அர்ப்பணிப்பாலும் அரவணைப்பா லும், ‘இழப்பதற்கு இனி ஒன்று மில்லை’ என்று தவித்து நிற்கும் டெல்டா மாவட்ட மக்களிடம், ‘மீண்டு வருவோம்’ என்ற நம்பிக்கையை விதைத்திருக்கின்றனர்.

புகழ்பெற்ற ஆன்மிக குரு ஒருவர், 5 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் முகாமிட்டிருந்தார். அவருடைய அருளாசியைப் பெறுவதற்கு தினமும் ஆயிரக்கணக்கான தொ ண்டர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து குவிந்தனர். கழிவறைக்கான பகுதி யில் 2 வரிசைகளில் மக்கள் நின்று கொண்டிருந்தனர். ஒரு வரிசையில் கூட்டம் குறைவாகவும், இன்னொரு வரிசை மிக நீண்டதாகவும் இருந்தது. சந்தேகத்துடன் விசாரித்தபோது ஆச்சர்யமான தகவல் கிடைத்தது. சிறிய வரிசையில் நிற்பவர்கள் கழிவ றையைப் பயன்படுத்த நிற்பதாகவும், நீண்ட வரிசையில் கழிவறையைச் சுத்தம் செய்வதற்காக ‘தன்னார் வத்துடன்’ பக்தர்கள் நிற்பதாகவும் சொன்னார்கள்.

அரசு உயர் அதிகாரிகள், செல் வந்தர்கள், உயர்கல்வி நிறுவனங் களில் பயின்றவர்கள், பெரும்பாலும் உயர் நடுத்தர வர்க்கத்தினர் என பலரும் ‘கழிவறையைச் சுத்தம் செய்து’ குருவின் அருளைப் பெறக் காத்திருந்தனர்.

விருது வாங்கிய சாமியார்கள்

சில லட்சம் மரக்கன்றுகளை நட்டுவிட்டு, பல கோடி மரங்களை வளர்த்ததாக பல ‘கார்ப்பரேட்' சாமியார்கள் விருது வாங்கினர். எங்கெங்கோ கோடிக்கணக்கான மரங்களை வளர்த்ததாகச் சொல்கிற சாமியார்களும் அவர்களது தொண் டர்களும், கஜா புயலில் வாழ்வா தாரமான மரங்களை இழந்து தவிக் கும் மக்களின் அருகில்கூட செல்ல வில்லை என்பதை நாம் கவனித்தாக வேண்டும். மக்கள் துயரப்படும் பேரிடர் காலங்களில் இவர்கள் யாரும் களத்தில் தென்படுவதே இல்லை. பக்தர்கள் பங்களித்த காணிக்கைப் பணத்தில் அரண்மனை போல உருவான வழிபாட்டுத் தலங்கள் பலவும், உறங்க இடமும் உண்ண உணவும் குடிக்க நீரும் இன்றி தவித்த மக்களை அரவணைக்கவில்லை என்பதே கசப்பான உண்மை.

ஆன்மிக அமைப்புகளே இப்படி என்றால், சுயநலத்தையும் விளம்பரத்தையும் அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளைப் பற்றி தனியாக சொல்ல எதுவும் இல்லை. காலம் எந்த வெற்றிடத்தையும் அப்படியே விட்டுவிடாது. தகுதியான வர்களை அடையாளம் கண்டு, அந்த வெற்றிடத்தை நிரப்பிக்கொள்ளும். ‘இயற்கைப் பேரிடர்கள்’ நமக்குள் இருக்கும் மனிதநேயத்தைத் தட்டி எழுப்பி இருக்கின்றன. அரசியல் கட்சியினரிடம் முறையிட்டும், காத்திருந்தும், கையூட்டு கொடுத்தும் தங்களுக்கான இழப்பீடுகளைப் பெற்றுக்கொண்டிருந்த மக்கள், சக மனிதர்களின் உண்மையான அன்பில் மீண்டெழுகின்றனர்.

ஆட்சியில் இருப்பவர்கள், ஆட்சி யைப் பிடிக்கத் துடிப்பவர்கள் என ‘மக்கள் ஆதரவு’ தேவையுள்ள வர்களைவிட, எதிர்பார்ப்புகள் ஏது மற்ற தன்னார்வலர்கள்தான் மீட்புப் பணிகளில் அசத்துகின்றனர். ‘எதிர் காலக் கணக்குகள்’ எதுவுமின்றி களத்தில் சூறாவளியைப்போல சுழல் கின்ற தன்னார்வலர்களைக் கடந்து எப்படி மக்களிடம் செல்வது என்று அவர்கள் திகைத்து நிற்கின்றனர்.

நம்பிக்கை தரும் தன்னார்வலர்

இன்றைய சூழலில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நம்பிக் கைக் குறைவு ஏற்படுவதுதான் இருப்பதிலேயே ஈடுசெய்ய முடியாத இழப்பு. ‘நீங்கள் தனித்து இல்லை. நாங்கள் இருக்கிறோம்’ என்கிற பாதுகாப்பு உணர்வை, சக மனிதர்கள் காட்டும் அன்பிலிருந்தே அவர்கள் பெற முடியும். அந்த வகை யில் பேரிடரின் இருளில், தன்னார் வலர்கள் என்கிற சிறு சிறு தீபங்களே நம்பிக்கை ஒளி வீசுகிறார்கள்.

இருள் நீக்க ஒளிவீசும் தீபங் களை மக்கள் வணங்குவார்கள்; வாழ்த்துவார்கள். இரவு பகலாக உணவு உறக்கமின்றி களத்தில் நிற்கும் ஒவ்வொரு தன்னார்வலரையும் வணங்கி வாழ்த்துவோம்.

கோடிகளில் காணிக்கை வாங்கும் சக்தி படைத்த சாமியார்களும், தேர்தல் நிதியாக பலநூறு கோடி களை ‘நன்கொடையாக’ வசூலிக்கும் அரசியல் கட்சிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ‘கொடையளிக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் வைக்கவில்லை. ஆனால், களப்பணி யாற்றும் தன்னார்வலர்கள் நண்பர் களிடம், உறவினர்களிடம் மக்களுக் காக உதவி கேட்கின்றனர். சாதாரண மக்களும் 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் என தங்களுடைய உழைப்பில் சேர்த்த பங்களிப்பை, உண்மையாக செயல்படுகிறவர்களைத் தேடிச் சென்று வழங்கிய எண்ணற்றவர் களைப் போற்றி மகிழ்வோம். துன்பத்தில் கிடைத்த ஆறுதல் அல்ல தன்னார்வலர்கள். ஒருவகையில் இவர்கள் மாற்றத்தின் தூதர்கள்.

சமூக மாற்றம் தேவை

பேரிடர் காலங்களில் மட்டும் இவர்கள் களத்தில் இறங்காமல், மக்கள் தங்கள் உரிமைகளை மீட்கவும், தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கவும் தேவையான மாற்றத்துக்காகக் களத்தில் இறங்கி பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். அதுதான் ‘நிரந்தரப் பேரிடர்’ வராமல் நம்மைக் காக்கும். சமூக மாற்றத்துக்குத் தன்னலம் துறந்தவர்களே துணைநிற்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x