காந்தியை கவர்ந்த திருப்பூர்: கதருக்கும் ஊருக்கும் உள்ள பந்தம்

காந்தியை கவர்ந்த திருப்பூர்: கதருக்கும் ஊருக்கும் உள்ள பந்தம்
Updated on
3 min read

ன்றைக்கு திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடியை தாண்டி விட்டது. இதே திருப்பூர் ஆதிகாலத்திலேயே கதர் துணி வர்த்தகத்தில் லட்சங்களில் வருமானத்தை ஈட்டித் தந்த ஊர்.

1925 மார்ச் 19-ல் திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிய மகாத்மா காந்தி, ‘கதரின் தலைநகரம் திருப்பூர்’ என்றார். ‘இந்தியாவின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் எனது கூட்டங்களுக்கு கதர் ஆடை அணிந்தவர்கள் மிகவும் குறைவாகவே வருவதை நான் கவனித் துள்ளேன். ஆனால், தென் இந்தியாவில், திருப்பூரில் எனது பொதுக்கூட்டங்களுக்கு வந்த பெரும்பாலான ஆண்களும், பெண்களும் கதர் ஆடை உடுத்தியிருந்தது எனக்கு நம்பிக்கையை அளித்தது’ - ‘யங் இந்தியா’ நூலில் இப்படிக் குறிப்பிடுகிறார் காந்தி. அந்த அளவுக்கு கதர் உற்பத்தியிலும், கதர் உடுத்துவதிலும் மற்ற ஊர்களுக்கு முன்னோடியாக இருந்தது திருப்பூர். இப்போதும் அந்த இயல்பை தொலைத்து விடவில்லை இந்த நகரம்

1921-ல், திருப்பூர் ரயில் நிலையம் பகுதியில், ஐநூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், இந்திய சுதந்திரத்தின் சீருடையாகப் பார்க்கப்பட்ட கதர் ஆடையை அணிந்து வரிசையாக அமர்ந்து ராட்டை நூற்று காந்திக்கு வரவேற்பு அளித்தனர். அதற்கடுத்த நான்கு ஆண்டுகளில் அகில இந்திய நூற்போர் சங்கம் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார் காந்தி. அப்போது, அந்த சங்கத்தின் தமிழகத்தின் முதல் கிளை திருப்பூரில் தொடங்கப்பட்டது. காந்தி மீது திருப்பூர் மக்கள் வைத்திருந்த பற்றுதலும் கதர் மீது கொண்டிருந்த காதலும் இங்கு கிளை தொடங்க முக்கியக் காரணம்.

1936-ல், திருப்பூர் காந்திநகரில் 13 ஏக்கரில் நூற்போர் சங்க நிறுவனத்துக்கு சொந்தக் கட்டிடம் கட்ட ஜவ ஹர்லால் நேருவே திருப்பூருக்கு வந்து அடிக்கல் நாட்டினார். கட்டிமுடிக்கப்பட்ட இந்தக் கட்டிடத்தை பிற்பாடு திறந்து வைத்தவர் சத்தியமூர்த்தி. காந்தி நகரை தலைமையிடமாகக் கொண்டு, அன்றைய தமிழகம் மற்றும் கேரளப் பகுதிகளில் கதர் உற்பத்தி, விற்பனை பணிகள் நடைபெற்றன. இதன் மூலம் பெண்கள் உள்பட பல்லாயிரக் கணக்கானோருக்கு வேலை வாய்ப்பும் உறுதிசெய்யப்பட்டது.

நூற்போர் சங்கத்தை விரிவுபடுத்தும் வகையில் 1942-ல், பல்லடம் சாலை வீரபாண்டி வித்யாலயத்தில் பயிற்சி நிலையம் ஒன்று தொடங்கப்பட்டது. இங்கு, கதர் தத்துவம், நூற்பு, நெசவு மற்றும் காந்தியக் கொள்கை கோட்பாடுகள் குறித்து ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நூற்போர் சங்கம் தான் 1958-ல், தமிழ்நாடு சர்வோதய சங்கமாக பரிணாம வளர்ச்சி கண்டது.

அன்று முதல், சர்வோதய சங்கம் கதர் உற்பத்தி, விற்பனை மற்றும் கிராமத் தொழில்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 1958-க்குப் பிறகு, திருப்பூர் காந்தி நகரில் உற்பத்தி செய்யப்படும் கதர் பொருட்கள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டன. இதனால், அந்த சமயத்தில் காந்திநகரில் ஆண்டுக்கு 70 லட்ச ரூபாய் அளவுக்கு கதர் பொருட் களின் உற்பத்தி கொடிகட்டிப் பறந்தது.

பருத்தி எடுப்பது, அரைப்பது, சுத்தப்படுத்துவது, பட்டைபோடுவது, நூல் நூற்பது, தரவாரியாக பிரிப்பது, நெசவில் பாவுநூலும் குறுக்கு நூலும் போடுவது, நெய்வது, வெளுப்பது மற்றும் சாயம் இடுவது என அப்போது காந்தி நகரில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கதர் தொழிலில் இருந்தார்கள். நாளடைவில், கதர், பட்டு உற்பத்தியோடு நிறுத்திவிடாமல் பஞ்சு மெத்தைகள், ஊதுபத்தி, ஜவ்வாது, தேன், சாம்பிராணி, உணவுப் பொருள்கள், கட்டில், சேர், மரச் சாமான்கள், பீரோக்கள் உள்ளிட்டவையும் காந்தி நகரில் உற்பத்தி செய்யப்பட்டன. இன்றளவும் இந்த உற்பத்திகள் தொடர்கின்றன. இன்றைய தேதி யில், திருப்பூர் சர்வோதய சங்கத்தை நம்பி சுமார் 15 ஆயிரம் குடும்பங்கள் பிழைக்கின்றன.

அதை வருங்கால தலை முறையும் தெரிந்து கொள்ளும் விதமாக இங்கே அவரது பிறந்த நாளில் நூற்பு வேள்வி நடத்துகிறோம். அப்போது, கைராட்டைகள் மூலம் நூல் நூற்கப்படும்” என்றார்.

திருப்பூர் வித்யாலயத்தில் உள்ள கதர் கிராமத் தொழில் பயிற்சி மையத்தின் முதல்வர் ர.ஹரிஹரசுப்பிரமணியன் நம்மோடு பேசுகையில், “கதர் என்பது வெறும் துணி மட்டுமல்ல. அது ஒரு கொள்கை; கருத்து. மக்கள் இப்போது கதர் பொருட்களின் மகிமையை உணர ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால் தான், சமீபகாலமாக கதர் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. கதர் மற்றும் அது சார்ந்த பொருட்களின் உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் வகையில், கதர் கிராமத் தொழிலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு திருப்பூர் வித்யாலயத்தில் இலவச பயிற்சி அளிக்கிறோம்” என்றார்.

திருப்பூர் மக்கள் காந்தியை இன்றைக்கும் கொண்டாடுகிறார்கள். அதன் அடையாளம் தான் இன்னமும் கதருக்கு இவர்கள் செய்யும் மரியாதை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in