

கேரட் சாப்பிட்டால் கண் நன்றாகத் தெரியும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால், பல குழந்தைகள் கேரட் போன்ற காய்களைச் சாப்பிட அடம்பிடிப்பார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளுக்காகவே வித்தியாசமான முறையில் கேரட்டில் பல வகையான, சுவைமிக்க உணவு வகைகளைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை தேனாம்பேட்டையச் சேர்ந்த மேகலா.
கேரட் அடை
தினை, வரகு, சாமை, இட்லி அரிசி
– தலா கால் கப்
துவரம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – தேவையான அளவு
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
துருவிய கேரட் – அரை கப்
துருவிய பனீர் – கால் கப்
தினை, வரகு, சாமை, இட்லி அரிசி, துவரம் பருப்பு ஆகியவற்றை நான்கு மணி நேரம் ஊறவையுங்கள். பின்பு காய்ந்த மிளகாய் சேர்த்து அரையுங்கள். உப்பு, பெருங்காயத் தூள், துருவிய கேரட் சேர்த்துக் கலந்து அடைகளாகச் சுட்டெடுங்கள். துருவி வைத்துள்ள பனீரை கேரட் அடை மீது தூவிப் பரிமாறுங்கள்.