

என்னென்ன தேவை?
கொள்ளு - அரை கப்
முந்திரி, பாதாம், தேங்காய்த் துருவல் - தலா ஒரு டேபிள் டீஸ்பூன்
சர்க்கரை - ருசிக்கேற்ப
பாதாம் எசென்ஸ் - அரை டீஸ்பூன்
பால் - ஒன்றரை கப்
எப்படிச் செய்வது
கொள்ளுவை முதல்நாள் ஊறவைத்து மறுநாள் அரைத்து, வடிகட்டிப் பால் எடுத்துக்கொள்ளுங்கள். பாதாம், முந்திரி இரண்டையும் நான்கு மணி நேரம் ஊறவைத்துத் தேங்காய்த் துருவலுடன் அரைத்துக்கொள்ளுங்கள். அதைக் கொள்ளுப் பாலுடன் சேர்த்துத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துப் பச்சை வாசனை போகக் காய்ச்ச வேண்டும். கொள்ளுப் பால் கெட்டியானதும் அரை கப் பாலை சேர்த்து காய்ச்ச வேண்டும்.பின் சர்க்கரை, மீதமுள்ள பால், பாதாம் எசன்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து பிரிட்ஜில் வைத்துக் குடித்தால் சுவையான கொள்ளு கீர் தயார்.