வீடெல்லாம் மணக்கும் ஓணம்: எரிசேரி
என்னென்ன தேவை?
வாழைக்காய் – 1
தேங்காய் எண்ணெய் – சிறிது
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
மிளகு - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – மூன்று
தேங்காய்த் துருவல் - கால் கப்
சேனைக் கிழங்கு - அரை கப்
துருவிய வெல்லம்
- ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள்
- ஒரு சிட்டிகை
எப்படிச் செய்வது?
வாழைக்காய், சேனைக் கிழங்கு இரண்டையும் தோல் சீவி, கனமான துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். இவற்றைத் தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து வேகவையுங்கள். காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், மிளகு ஆகியவற்றுடன் தண்ணீர் தெளித்து அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த மசாலாவைக் கொதிக்கும் கலவையில் சேருங்கள். தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டுங்கள். வெல்லத் துருவல் சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள். சிறிது தேங்காய்த் துருவலை வெறும் வாணலியில் வறுத்து, கலவையின் மேலே தூவுங்கள். இதைச் சோற்றில் பிசைந்து சாப்பிடலாம், சிற்றுண்டிகளுக்குத் தொடுகறியாகவும் வைத்துக்கொள்ளலாம்.
