

ஆடி,அம்மனின் மாதம் மட்டுமல்ல. விதவிதமான படையல்களின் மாதமும்கூட. ஆடி மாத வெள்ளிக் கிழமைகளும், ஞாயிற்றுக் கிழமைகளும் படையல்களால் களைகட்டிவிடும். சில தென் மாவட்டங்களில் சிறு தானியங்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்றால் வட மாவட்டங்களிலோ கூழும், கருவாட்டுக் குழம்பும் ஊரையே கூட்டும். அம்மனுக்குப் படையலிடுவதற்காகச் செய்யப்படுகிற முருங்கைக் கீரையிலும், மாவிளக்கு மாவிலும் எப்படித்தான் அப்படி ஒரு சுவை வந்துவிடுமோ தெரியாது.
வேதாரண்யம் தாலுகா வாய்மேடு மேற்கைச் சேர்ந்த விஜயலட்சுமிக்கு ஆடி மாதம் பிறந்துவிட்டாலே உற்சாகமும் பிறந்துவிடும். தங்கள் பகுதியில் செய்யப்படுகிற ஆடி மாத உணவு வகைகளை நம்முடன் அவர் பகிர்ந்துகொள்கிறார். சென்னை ஈக்காட்டுத் தாங்கலைச் சேர்ந்த இந்திராணி பொன்னுசாமிக்கும் அம்மனுக்கு உகந்த உணவுகளைச் செய்வதில் அலாதி விருப்பம். அவற்றில் சிலவற்றின் செய்முறையை இங்கே தருகிறார். ஆடியைக் கொண்டாட இதைவிட வேறென்ன வேண்டும்?