பாவ் பஜ்ஜி

பாவ் பஜ்ஜி
Updated on
1 min read

என்னென்ன தேவை?

பாவ் பன் - 4

பஜ்ஜி - 4

புதினா சட்னி, தக்காளி சட்னி – தலா 4 டீஸ்பூன்

வெண்ணெய் – 6 டீஸ்பூன்

புதினா சட்னி செய்ய

புதினா இலைகள் - சிறிதளவு

பச்சை மிளகாய் - 2

உப்பு – தேவையான அளவு

வறுத்தசீரகம்,

வறுத்த நிலக்கடலை – தலா ஒரு டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன்

சர்க்கரை (விருப்பப்பட்டால்) - சிறிதளவு

தக்காளி சட்னி செய்ய

தக்காளி, வெங்காயம் – தலா ஒன்று

காய்ந்த மிளகாய் - 2

புளி - சுண்டைக்காய் அளவு

நல்லெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

புதினா சட்னி செய்வதற்காகக் கொடுத்துள்ள பொருட்களைப் பச்சையாக அரைத்துக்கொள்ளுங்கள். சிறிதளவு நல்லெண்ணெயில் காய்ந்த மிளகாய், தக்காளி, வெங்காயம், பெருங்காயம் ஆகியவற்றை வதக்கி உப்பு, புளி சேர்த்து அரையுங்கள். விரும்பினால் தக்காளி சட்னியில் கடுகு தாளித்துச் சேர்க்கலாம்.

பாவ் பன்னை இரண்டாகப் பிளந்து ஒரு பக்கம் புதினா சட்னியையும் மறுபக்கம் தக்காளி சட்னியையும் தடவுங்கள். நடுவில் பஜ்ஜி வைத்து தோசைக்கல்லில் வெண்ணெய் போட்டு இருபுறமும் டோஸ்ட் செய்து சூடாகப் பரிமாறுங்கள். விரும்பினால் பஜ்ஜியோடு வெங்காயம், வெள்ளரி, தக்காளி இப்படி ஏதாவது காய்களைத் துண்டுகளாக்கி வைத்தும் பரிமாறலாம். என்பதை சேர்த்துக்கொள்ளவும்.

படங்கள்: எல்.சீனிவாசன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in