விதவிதமா தொடுகறி: அவகோடா துவையல்

விதவிதமா தொடுகறி: அவகோடா துவையல்
Updated on
1 min read

என்னென்ன தேவை:

அவகோடா பழக் கூழ் (தோல், கொட்டை நீக்கியது) - அரை கப்

வறுத்து அரைக்க:

உளுந்து - 2 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 8

பூண்டு - 3 பல்

புளி - சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

கடுகு – அரை டீஸ்பூன்

பெருங்காயம் - சிறிதளவு

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது:

எண்ணெயைச் சூடாக்கி, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்துக் கொள்ளுங்கள். ஆறியதும் புளி சேர்த்துப் பாதி அரைபட்டதும் அவகோடா பழக்கூழைச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். தாளிக்கும் பொருட்களைத் தாளித்துச் சேருங்கள். பழக்கூழில் தேவையான நீர் இருப்பதால் கூடுதலாகத் தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.

ஸ்வீட் ஸ்பைசி மோர்க்குழம்பு

என்னென்ன தேவை:

புளித்த தயிர் - 2 கப்

சர்க்கரை - 5 டீஸ்பூன்

கடலை மாவு - 2 டீஸ்பூன்

உப்பு, மஞ்சள் தூள்- தேவையான அளவு

தாளிக்க

நெய் – 2 டீஸ்பூன்

பட்டை – சிறு துண்டு

லவங்கம் - 4

பிரிஞ்சி இலை - சிறிதளவு

எப்படிச் செய்வது:

கடைந்த தயிரில் அரை கப் நீர், உப்பு, மஞ்சள் தூள், கடலை மாவைச் சேர்த்துக் கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் நெய் ஊற்றிச் சூடாக்கி, தாளிக்கும் பொருட்களைக் போட்டுத் தாளியுங்கள். அதில் தயிர் கலவையைச் சேருங்கள். இந்தக் கலவை லேசாக நுரைத்துப் பொங்கிவரும் போது, சர்க்கரை சேர்த்து இறக்கிவையுங்கள். காரமில்லாத இந்த மோர்க்குழம்பு ருசியாக இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in