Published : 11 Dec 2016 13:00 pm

Updated : 11 Dec 2016 13:00 pm

 

Published : 11 Dec 2016 01:00 PM
Last Updated : 11 Dec 2016 01:00 PM

தித்திக்கும் திருக்கார்த்திகை: தேன் தினை லட்டு

என்னென்ன தேவை?

வறுத்த தினை மாவு - 1 கப்


நாட்டுச் சர்க்கரை - 1/2 கப்

( பொடித்தது )

தேன் - 1/4 கப்

ஏலப்பொடி - 1 டீஸ்பூன்

நெய் - 3 டீஸ்பூன்

முந்திரி, திராட்சை - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

தினை அரிசியை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை மிதமான சூட்டில் வறுக்கவும். ஆறியதும் மிக்சியில் பொடித்துக்கொள்ளவும். நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வறுத்த மாவு, பொடித்த சர்க்கரை, ஏலப்பொடி, தேன், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.


தலைவாழைசமையல் குறிப்புசமையல் டிப்ஸ்தேன் தினை லட்டு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x