Last Updated : 17 Dec, 2016 04:56 PM

 

Published : 17 Dec 2016 04:56 PM
Last Updated : 17 Dec 2016 04:56 PM

விதவிதமா தொடுகறி: அன்னாசி பருப்பு மசியல்

என்னென்ன தேவை:

அன்னாசிப் பழத் துண்டுகள் - ஒரு கப்

பாசிப் பருப்பு - ஒரு கப்

உப்பு, மஞ்சள் தூள் – தேவையான அளவு

தாளிக்க:

நெய் - ஒரு டீஸ்பூன்

கடுகு, பெருங்காயம் - சிறிதளவு

பச்சை மிளகாய் - 2

மிளகு, சீரகப் பொடி - அரை டீஸ்பூன்

எப்படிச் செய்வது:

அன்னாசிப் பழத் துண்டுகள், பாசிப் பருப்புடன் தேவையான நீர் விட்டு குக்கரில் போட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கிவையுங்கள். வாணலியில் நெய் விட்டுச் சூடாக்கித் தாளிக்கும் பொருட்களைப் போட்டுத் தாளியுங்கள். வெந்த பருப்பு - அன்னாசிப் பழக் கலவையைச் சேர்த்து நன்றாகக் கொதி வந்ததும் இறக்கிவையுங்கள். கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x