

என்னென்ன தேவை?
உளுந்து போண்டா - 6
பாசிப் பருப்பு, துவரம் பருப்பு – தலா ஒரு கரண்டி
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
தக்காளி, வெங்காயம் – தலா ஒன்று
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
தனியா, சீரக பொடி – தலா ஒரு டீஸ்பூன்
நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு
சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு
எலுமிச்சைச் சாறு (விரும்பினால்) - சிறிதளவு
எப்படிச் செய்வது?
பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவையுங்கள். பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்குங்கள். தனியாப் பொடி, சீரகப் பொடி, ஊறவைத்த பருப்பு சேர்த்து வேகவிடுங்கள். அதனுடன் உப்பு, எலுமிச்சை சாறு, கொத்தமல்லி சேர்த்துக் கலக்குங்கள். போண்டாவை ஒரு கிண்ணத்தில் போட்டு அதன் மீது இந்த சூப்பை ஊற்றிப் பரிமாறுங்கள்.
போண்டாவை வெந்நீரில் போட்டு அதிகப்படி எண்ணையைப் பிழிந்து எடுத்துவிட்டு பிறகு சூப் ஊற்றியும் பரிமாறலாம். இந்த போண்டா சூப் பெங்களுருவின் பிரபல மாலை நேர நொறுவை.