

என்னென்ன தேவை:
புளித்த தயிர் - 2 கப்
சர்க்கரை - 5 டீஸ்பூன்
கடலை மாவு - 2 டீஸ்பூன்
உப்பு, மஞ்சள் தூள்- தேவையான அளவு
தாளிக்க
நெய் – 2 டீஸ்பூன்
பட்டை – சிறு துண்டு
லவங்கம் - 4
பிரிஞ்சி இலை - சிறிதளவு
எப்படிச் செய்வது:
கடைந்த தயிரில் அரை கப் நீர், உப்பு, மஞ்சள் தூள், கடலை மாவைச் சேர்த்துக் கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் நெய் ஊற்றிச் சூடாக்கி, தாளிக்கும் பொருட்களைக் போட்டுத் தாளியுங்கள். அதில் தயிர் கலவையைச் சேருங்கள். இந்தக் கலவை லேசாக நுரைத்துப் பொங்கிவரும் போது, சர்க்கரை சேர்த்து இறக்கிவையுங்கள். காரமில்லாத இந்த மோர்க்குழம்பு ருசியாக இருக்கும்.