

என்னென்ன தேவை?
ஆட்டுக் கறி – அரை கிலோ
வெங்காயம் – 2
தக்காளி – ஒன்று
உப்பு, மஞ்சள் தூள், தயிர் – தேவையான அளவு
வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் – 20
மல்லி – 2 டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
தாளிக்க:
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
பட்டை – சிறு துண்டு
கிராம்பு – 2
பிரிஞ்சி இலை – சிறிதளவு
கறிவேப்பிலை, மல்லித் தழை – சிறிதளவு
எப்படிச் செய்வது?
கறியைத் தயிரில் ஊறவைத்து சுத்தம் செய்துகொள்ளுங்கள். குக்கரில் கறி, அரைத்த மசாலா ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் ஆறு விசில் விட்டு இறக்கிவையுங்கள்.
அடி கனமான வாணலியில் நல்லெண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை தாளித்து வெங்காயத்தைச் சேர்த்து, சிவக்க வதக்குங்கள். பிறகு தக்காளி சேர்த்து அது கரையும்வரை வதக்கி, மீதமுள்ள மசாலா, வெண்ணெய் சேர்த்துக்
குறைந்த தீயில் நன்றாக வதக்குங்கள். வேகவைத்துள்ள கறியைச் சேர்த்து உப்பு சரி பார்த்து எண்ணெய் பிரியும்வரை நன்றாகக் கிளறி இறக்கிவையுங்கள். மல்லித் தழை தூவிப் பரிமாறுங்கள்.