

என்னென்ன தேவை?
வடித்த சாதம் - ஒரு கப்
துவரம் பருப்பு - கால் கப்
பாசிப்பருப்பு, உளுந்து,
- கால் கப் (இரண்டும் சேர்த்து)
பூண்டு பல் - 3
எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிது
மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
நல்லெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அடி கனமான வாணலியில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, முதலில் துவரம்பருப்பைப் போட்டு லேசாக வறுத்துக்கொள்ளுங்கள். பிறகு பாசிப்பருப்பு, உளுந்து இரண்டையும் சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் மிளகு அல்லது காய்ந்த மிளகாயைப் போட்டு வறுத்தெடுங்கள். பிறகு பூண்டு போட்டு வதக்கி, பெருங்காயம் சேர்த்து இறக்கிவையுங்கள். ஆறியதும் இவற்றுடன் உப்பு சேர்த்துப் பொடித்துக் கொள்ளுங்கள்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை தாளித்து அதில் ஐந்து டேபிள் ஸ்பூன் பொடியைச் சேர்த்துப் புரட்டி இறக்கிவையுங்கள். சாதத்தை அதில் சேர்த்துக் கிளறி பரிமாறுங்கள். இந்தப் பொடியை மொத்தமாக செய்து வைத்துக்கொள்ளலாம். நெய் அல்லது நல்லெண்ணெய் போட்டு சாப்பிடலாம். குளிர் காலத்தில் ஏற்படும் தொண்டைக்கட்டுக்கு மிளகு நல்லது என்பதால் இதைக் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம்.
ராஜகுமாரி