நண்டு வறுவல்

நண்டு வறுவல்
Updated on
1 min read

என்னென்ன தேவை?

நண்டு – 5

சின்ன வெங்காயம் – 15

தக்காளி – 2

மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் - சிறிதளவு

வதக்கி அரைக்க:

பூண்டு பல் - 10

மிளகு – 2 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய் – தேவையான அளவு

சோம்பு – அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை, மல்லித் தழை – சிறிதளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, வெங்காயம் போட்டு சிவக்க வதக்குங்கள். பிறகு தக்காளித் துண்டுகளைச் சேர்த்து நன்றாக வதக்கி, அரைத்த மசாலா, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள். நண்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். நண்டு வெந்து, மசாலா கெட்டியானவுடன் மல்லித் தழை தூவி இறக்கிவையுங்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in