ஆடி படையல் - கொள்ளு சுண்டல்

ஆடி படையல் - கொள்ளு சுண்டல்
Updated on
1 min read

என்னென்ன தேவை?

கொள்ளு - 100 கிராம்

காய்ந்த மிளகாய் - 2

தேங்காய்த் துருவல் - 1 கைப்பிடி

பெருங்காயம் - 1 சிட்டிகை

கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கொள்ளுப் பயறை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் காலை நன்றாக வேகவைக்கவும். மிக்ஸியில் தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய் இவற்றைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றியெடுக்கவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து அதில் கொள்ளைச் சேர்க்கவும். அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.

கொள்ளுப் பயறு வேகவைத்த தண்ணீரை வீணாக்காமல் அதில் சூப் செய்து சாப்பிடலாம். மூன்று டம்ளர் தண்ணீருக்கு 5 பூண்டு பற்கள் தட்டிப்போடவும். சிறிதளவு மிளகு, சீரகத்தைப் பொடித்துச் சேர்க்கவும். 1 சிட்டிகை மஞ்சள் தூள், பெருங்காயம், தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, இறக்கி வைக்கவும். புளிப்புச் சுவை விரும்புகிறவர்கள் சிறிதளவு புளி அல்லது எலுமிச்சைச் சாறு சேர்த்துக்கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in