முடக்கத்தான் ரசம்

முடக்கத்தான் ரசம்
Updated on
1 min read

என்னென்ன தேவை?

முடக்கத்தான் கீரை

(பொடியாக நறுக்கியது) - ஒரு கப்

பச்சை மிளகாய் - ஒன்று

புளி - கொட்டைப்பாக்கு அளவு

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

பொடித்துக்கொள்ள

மிளகு - ஒரு டீஸ்பூன்

தனியா - 2 டீஸ்பூன்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

தாளிக்க

கடுகு - ஒரு டீஸ்பூன்

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

பூண்டு (நசுக்கியது) - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

ஒரு கப் சூடான தண்ணீரில் முடக்கத்தான் கீரையைப் போட்டு அரை மணிநேரம் மூடிவையுங்கள். பொடித்துக்கொள்ளக் கொடுத்திருக்கும் பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து, கொரகொரப்பாகப் பொடித்துக்கொள்ளுங்கள். அடி கனமான பாத்திரத்தில் புளியைக் கரைத்து ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். ஒரு கொதி வந்ததும், பொடித்துவைத்த பொடியையும் முடக்கத்தான் கீரை ஊறிய சாற்றையும் சேர்த்து மீண்டும் ஒரு கொதி வரும்வரை வேகவிடுங்கள். தாளிக்கக் கொடுத்த பொருட்களைக் கொண்டு ரசத்தைத் தாளித்து இறக்கி, முடக்கத்தான் கீரையைத் தூவிப் பரிமாறலாம். மழை, குளிர் காலங்களில் மூட்டு வலி வரும்போது, இந்த ரசத்தைச் சாப்பிட்டால் வலி குறையும்.


ராஜகுமாரி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in