

என்னென்ன தேவை?
ஆட்டு ஈரல் – கால் கிலோ
சின்ன வெங்காயம் – 10
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
வதக்கி அரைக்க:
இஞ்சி - சிறிய துண்டு
மல்லி – ஒரு டீஸ்பூன்
பூண்டு பல் - 4
மிளகு – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
தாளிக்க:
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை, மல்லித் தழை – சிறிதளவு
எப்படிச் செய்வது?
ஈரலை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். வாணலியில் வெண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் போட்டு சிவக்க வதக்குங்கள். பிறகு ஈரல் துண்டுகளைச் சேர்த்து நான்கு நிமிடங்கள் வதக்கி, அரைத்த மசாலா, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்குங்கள். சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். ஈரல் வெந்து மசாலா கெட்டியானவுடன் மல்லித் தழை தூவி இறக்கிவையுங்கள்.
ரத்த சோகைக்கு ஆட்டு உள்ளுறுப்புகள், ரத்தம் போன்றவற்றை வாரம் ஒரு முறை சாப்பிட்டுவரலாம்.