இறால் மசாலா

இறால் மசாலா
Updated on
1 min read

என்னென்ன தேவை?

இறால் – அரை கிலோ

சின்ன வெங்காயம் – 15

தக்காளி – 2

மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்

இஞ்சித் துருவல் – சிறிதளவு

பச்சை மிளகாய் – 5

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

வதக்கி அரைக்க:

மல்லி - 2 டீஸ்பூன்

சோம்பு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய் / நெய் – தேவையான அளவு

சோம்பு – அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை, மல்லித் தழை – சிறிதளவு

எப்படிச் செய்வது?

இறாலைச் சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் வேகவைத்து எடுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி அரைத்த மசாலா, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து வதக்குங்கள். பிறகு இறாலைச் சேர்த்து உப்பு பார்த்து சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். இறால் வெந்ததும் தீயைக் குறைத்து, சுருளக் கிளறி மல்லித் தழை தூவி இறக்கிவையுங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in