

என்னென்ன தேவை?
அன்னாசிப் பழத் துண்டுகள், துருவிய வெல்லம் – தலா ஒரு கப் ஜவ்வரிசி - 5 டேபிள் ஸ்பூன் தேங்காய்ப் பால் - கால் கப் நெய் - 3 டேபிள் ஸ்பூன் பாதாம், முந்திரி - தலா ஒரு டேபிள் ஸ்பூன் ஏலப் பொடி - ஒரு டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
அடி கனமான ஒரு வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி பாதாம், முந்திரி போட்டு வறுத்துத் தனியே வைத்துக்கொள்ளுங்கள். மீதியுள்ள நெய்யில் ஜவ்வரிசியை வறுத்து, அரை கப் தண்ணீர் ஊற்றி வேகவைத்துக்கொள்ளுங்கள். அன்னாசிப் பழத் துண்டுகளை அரைத்து வடிகட்டி, சாறெடுத்துக் கொள்ளுங்கள். வேகவைத்த ஜவ்வரிசியில் வெல்லத்தைப் போட்டுக் கொதிக்கவிடுங்கள். லேசாகக் கொதித்ததும், அன்னாசிப் பழச் சாற்றை விட்டு மீண்டும் கொதிக்கவிடுங்கள். அத்துடன் தேங்காய்ப் பால் சேர்த்து மீண்டும் ஓரிரு கொதிகள் வந்ததும் வறுத்த பாதாம், முந்திரி சேர்த்து, ஏலப் பொடி தூவி இறக்கிவையுங்கள்.