

என்னென்ன தேவை?
பிஞ்சு இஞ்சி அல்லது சுக்குப் பொடி -100 கிராம் சர்க்கரை - ஒரு கப் நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
எப்படிச் செய்வது?
இஞ்சியைத் தோல் சீவிக் கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள். அடி கனமான பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் விட்டு சர்க்கரையைச் சேர்த்து கம்பி பாகு பதம் வரும்வரை காய்ச்சுங்கள். அரைத்த விழுதை அதில் சேருங்கள். இந்தக் கலவை நன்றாக நுரைத்து வந்ததும் அரை டேபிள் ஸ்பூன் நெய் விட்டுக் கிளறி இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டுங்கள். ஆறியதும் துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். வாந்தி, வாய்க்கசப்பு, வயிற்று மந்தம் ஆகியவற்றுக்கு ஏற்றது.