

என்னென்ன தேவை?
பரங்கிக்காய் - 150கிராம் கருப்புக் கொண்டைக்கடலை - 6 டேபிள் ஸ்பூன் கெட்டியான புளிக் கரைசல் - அரை கப் சின்ன வெங்காயம் - 10 தக்காளி - ஒன்று நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் வெல்லம் - ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை கொத்தமல்லித் தழை - சிறிதளவு உப்பு – தேவையான அளவு
வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் - 3 கடலைப் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன் தனியா - 5 டேபிள் ஸ்பூன் பெருங்காயம் - ஒரு சிட்டிகை எண்ணெய் - ஒரு டீஸ்பூன் தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு
எப்படிச் செய்வது?
ஆறு மணி நேரம் ஊறவைத்த கொண்டைக் கடலையை உப்பு போட்டு வேகவைத்துக் கொள்ளுங்கள். அடி கனமான வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வறுத்துப் பொடிக்க வேண்டிய பொருட்களை வறுத்து, கரகரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள். பிறகு பரங்கிக்காயைச் சேர்த்து, புளிக் கரைசல் ஊற்றி, அரை கப் தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடுங்கள். இவை வெந்ததும் கொண்டைக்கடலை, வறுத்து அரைத்த பொடியைத் தூவி, வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பின்னர் கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, மல்லித்தழை தூவி இறக்கிவையுங்கள். இது இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொண்டு சாப்பிட ஏற்றது.