

என்னென்ன தேவை?
திணை, பச்சரிசி – தலா ஒரு கப்
வெல்லம் - ஒரு கப்
ஏலக்காய்த் தூள், சுக்குத் தூள் - தலா ஒரு சிட்டிகை
எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
திணை, பச்சரிசி இரண்டையும் நன்றாகக் கழுவி நிழலில் உலர்த் துங்கள். லேசான ஈரப்பதத்தில் அரைத்து, சலித்துக் கொள்ளுங்கள். வெல்லத்தை முக்கால் கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, கம்பிப் பாகு பதம் வரும்வரை காய்ச்சுங்கள். பாகை மாவில் வடிகட்டி சேர்த்து ஏலக்காய்த் தூள், சுக்குத் தூள் சேர்த்து நன்றாகக் கிளறி, பந்து போல் உருட்டி, எட்டு மணி நேரம் அப்படியே வையுங்கள். இதனால் மாவு புளிப்புச் சுவை அடைந்து கூடுதல் சுவைபெறும். வாழையிலையில் லேசாக நெய் தடவி, சிறிதளவு மாவை எடுத்து அதில் வைத்துத் தட்டி சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுத்தால் மணக்க மணக்க அதிரசம் தயார்.
பிரேமா கார்த்திகேயன்