கசப்பு - பாகற்காய் மசாலா

கசப்பு - பாகற்காய் மசாலா
Updated on
1 min read

என்னென்ன தேவை?

சின்ன பாகற்காய் - ஒரு கப் மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் புளிக் கரைசல் - ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று கொத்தமல்லித் தழை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு

மசாலாவுக்கு - தேங்காய்த் துருவல் - கால் கப் காய்ந்த மிளகாய் - 4 பூண்டு - 3 பல் சின்ன வெங்காயம் - 6 இஞ்சி - சிறிய துண்டு தனியாத் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

பாகற்காய், உப்பு, மஞ்சள் தூள், புளிக் கரைசல் சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். மசாலாப் பொருட்களை தண்ணீர் விட்டுக் கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளியைச் சேர்த்து வதக்கி, வேகவைத்த பாகற்காயையும் அரைத்த மசாலாவையும் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். மல்லித்தழை தூவிப் பரிமாறுங்கள். இதை சப்பாத்தி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in