

என்னென்ன தேவை?
பாசுமதி அரிசி - கால் கிலோ
சோயா உருண்டைகள் - 10
பச்சைப் பட்டாணி - 50 கிராம்
நறுக்கிய வெங்காயம் - கால் கப்
அரிந்த பச்சை மிளகாய் - 1 டேபிள் ஸ்பூன்
டால்டா - 25 கிராம்
மிளகாய்த் தூள், இஞ்சி - பூண்டு விழுது - தலா ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
முந்திரி துண்டுகள் - 2 டேபிள் ஸ்பூன்
பட்டை - சிறிய துண்டு
ஏலக்காய், கிராம்பு - தலா 2
புதினா, மல்லித் தழை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பச்சைப் பட்டாணி, சோயா உருண்டைகள் இரண்டையும் தனித் தனியே வேகவையுங்கள். பாசுமதி அரிசியை இரண்டு கப் தண்ணீர் ஊற்றி உதிரியாக வேகவையுங்கள். அடி கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் டால்டாவைச் சேருங்கள். அது உருகியதும் எண்ணெய் ஊற்றி, இரண்டு கலந்த பிறகு பட்டை, கிராம்பு, ஏலம், வெங்காயம், முந்திரி, பச்சை மிளகாய் அனைத்தையும் ஒவ்வொன்றாக வதக்குங்கள். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்குங்கள். பிறகு பச்சைப் பட்டாணி, சோயா உருண்டைகளைச் சேர்த்து வதக்கி, வடித்த சாதத்தைச் சேர்த்துக் கிளறுங்கள். புதினா, மல்லித் தழை தூவி இறக்கிவையுங்கள்.
ராஜகுமாரி