

என்னென்ன தேவை?
பச்சரிசி - ஒரு கப்
பாசிப் பருப்பு - அரை கப்
கற்பூரவள்ளி இலை 6
மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்
முந்திரி - 10
நெய் தேவையான அளவு
பச்சை மிளகாய் 4
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பாசிப் பருப்பை லேசாக வறுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் பச்சரிசி, மூன்று கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் மூன்று விசில் விட்டு இறக்கிவையுங்கள். கற்பூரவள்ளி இலையை மிக்சியில் தண்ணீர் விடாமல் அரையுங்கள். வாணலியில் நெய் விட்டு முந்திரி, பச்சை மிளகாய், மிளகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு வதக்கி, அரைத்துவைத்திருக்கும் கற்பூரவள்ளி இலையையும் சேர்த்து வேக வைத்துள்ள சாதத்துடன் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி, சூடாகப் பரிமாறுங்கள். சளி, இருமல், தொண்டைக் கரகரப்புக்கு உகந்தது இந்தக் கற்பூரவள்ளி பொங்கல்.
- ராஜபுஷ்பா