

என்னென்ன தேவை?
இஞ்சி விழுது, சர்க்கரை அல்லது வெல்லம் தலா கால் கப்
எப்படிச் செய்வது?
இஞ்சியைத் தோல் சீவிக் கழுவி, நறுக்கி, மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொதிக்கவிடுங்கள். அதனுடன் இஞ்சி விழுதைச் சேர்த்து தொடர்ந்து கிளறுங்கள். ஒட்டாமல் அல்வா பதத்துக்கு வரும் போது இறக்கி, தட்டில் கொட்டுங்கள். சிறிது நேரம் ஆறவிட்டு, விரும்பிய வடிவங்களில் துண்டு போடுங்கள். நெஞ்சு எரிச்சல், அஜீரணம் ஆகியவற்றுக்கு இந்த இஞ்சி முரப்பா ஏற்றது.
- ராஜபுஷ்பா