

என்னென்ன தேவை?
செம்பருத்திப் பூ 20
காய்ந்த மிளகாய் 3
குடைமிளகாய் 1
சின்ன வெங்காயம் - 2 கைப்பிடியளவு
தேங்காய்த் துருவல் 3 டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு
தாளிக்க
நல்லெண்ணெய் சிறிதளவு
கடலைப் பருப்பு 1 டீஸ்பூன்
கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை, மல்லித் தழை சிறிதளவு
எப்படிச் செய்வது?
செம்பருத்திப் பூவைக் கழுவிப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை தாளித்து அதனுடன் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்குங்கள். பிறகு செம்பருத்திப் பூ, உப்பு, சிறிது தண்ணீர் தெளித்து வதக்குங்கள். தண்ணீர் வற்றியதும் தேங்காய்த் துருவல், மல்லித் தழை சேர்த்து இறக்கிவையுங்கள். பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்று வலியை இது குறைக்கும்.
- ராஜபுஷ்பா