

என்னென்ன தேவை?
அரிசி மாவு - 2 கப்
வெல்லம் - ஒன்றரை கப்
காராமணி - 4 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்/தேங்காய்ச் சில்லு - அரை கப்
ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
அரிசி மாவை வெறும் வாணலியில் சூடுபட வறுத்தெடுங்கள். காராமணியை வெறும் வாணலியில் வறுத்து, தண்ணீயில் ஊறவையுங்கள். அரை மணி நேரம் ஊறியதும் வேகவைத்து, தண்ணீரை வடித்துவிடுங்கள்.
அகலமான பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, வெல்லத்தைப் போட்டுக் கரையவிடுங்கள். வெல்லம் கரைந்ததும் ஏலக்காய்த் தூள், காராமணி, தேங்காய்ச் சில்லு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள். வறுத்து வைத்திருக்கும் அரிசி மாவையும் அதில் கொட்டி கெட்டியாகக் கிளறி, இறக்கிவையுங்கள்.
சூடு ஆறியதும் கையில் லேசாக நெய்யைத் தடவிக்கொண்டு, சிறிதளவு மாவை உருட்டிவைத்து நடுவே விரலால் அழுத்தித் தட்டையாக்கி, ஆவியில் வேகவையுங்கள்.
- சீதா சம்பத்