

என்னென்ன தேவை?
இட்லி மாவு ஒரு கப்
துளசி ஒரு கைப்பிடியளவு
சின்ன வெங்காயம் 10
மிளகாய் 3
தேங்காய்த் துருவல் சிறிதளவு
கடுகு, எண்ணெய், உப்பு தேவையான அளவு
எப்படிச் செய்வது?
துளசியைத் தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, மிளகாய் போட்டுத் தாளியுங்கள். பிறகு வெங்காயம், தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி அதனுடன் அரைத்து வைத்துள்ள துளசியையும் சேர்த்து வதக்கி, இட்லி மாவுடன் சேர்த்துக் கலக்குங்கள். குழிப் பணியாரச் சட்டியில் எண்ணெய் விட்டு இந்த மாவை ஊற்றி சிறிது நேரம் மூடி வைத்து, திருப்பிப் போட்டுப் பொன்னிறமாக வேகவிட்டு எடுங்கள். தேங்காய் சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
இந்தப் பணியாரம், சளி, மூக்கடைப்பு, இருமல் ஆகியவற்றை நீக்கும். ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும்.