பருப்பு கச்சோரி

பருப்பு கச்சோரி
Updated on
1 min read

என்னென்ன தேவை?

மேல்மாவுக்கு:

மைதா - ஒரு கப்

தயிர், எண்ணெய் - தலா 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

மெலிதாக அரிந்த பாதாம், திராட்சை - தலா 2 டேபிள் ஸ்பூன்

பூரணம் செய்ய:

பாசிப் பருப்பு - அரை கப்

கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் - ஒன்று

பொடியாக நறுக்கிய மல்லித் தழை - 2 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

கடலை மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

மேல் மாவுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களைத் தண்ணீர் சேர்த்து நன்றாகப் பிசையுங்கள். ஈரம் காயாதவாறு சிறிது நேரத்துக்கு மூடிவையுங்கள். பாசிப் பருப்பை அளவான நீர் விட்டு வேகவைத்து (தண்ணீர் இல்லாதவாறு வற்றியதும்) உப்பு, கரம் மசாலாத் தூள், பச்சை மிளகாய், பெருங்காயம், மல்லித் தழை, எலுமிச்சை சாறு, கடலை மாவு சேர்த்துக் கலந்தால் பூரணம் தயார்.

பாதாம், திராட்சையையும் பூரணத்துடன் சேர்த்துக்கொள்ளுங்கள். பிசைந்த மைதா மாவிலிருந்து சிறு உருண்டை எடுத்து, வட்டமாகத் தேய்த்து நடுவே இரண்டு டேபிள் ஸ்பூன் பூரணத்தை வைத்து மூடி, உருண்டையை லேசாகத் தட்டுங்கள். இதைச் சூடான எண்ணெயில் போட்டு, குறைவான தீயில் வேகவிட்டு எடுத்துவிடுங்கள். இனிப்புச் சட்னி, கொத்தமல்லிச் சட்னியுடன் கச்சோரியைச் சுவைக்க சுவையும், மணமும் பிரமாதமாக இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in