காலா சென்னா சாட்

காலா சென்னா சாட்
Updated on
1 min read

என்னென்ன தேவை?

கறுப்பு கொண்டைக்கடலை - ஒரு கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி - தலா கால் கப்

வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு - கால் கப்

நறுக்கிய மாங்காய் துண்டுகள் - 2 டேபிள் ஸ்பூன்

கறுப்பு உப்பு - கால் டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்

சாட் மசாலா - ஒரு டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய மல்லித் தழை - 2 டேபிள் ஸ்பூன்

நறுக்கிய புதினா - ஒரு டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கொண்டைக் கடலையை ஊறவைத்து, வேகவைத்துக் கொள்ளுங்கள். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொண்டடைக் கடலை, உருளை, தக்காளி, வெங்காயம், மாங்காய், உப்பு, மிளகாய்த் தூள், கறுப்பு உப்பு, சாட் மாசாலா இவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். எலுமிச்சை சாறு, மல்லித் தழை, புதினா சேர்த்துப் பரிமாறுங்கள்.

இந்தக் காலா சென்னா சாட், மாலை நேர தேநீர் இடைவேளைக்கு ஏற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in