

என்னென்ன தேவை?
கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம், தக்காளி - தலா 2
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 2
மஞ்சள் தூள், பெருங்காயம் - தலா ஒரு சிட்டிகை
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கடுகு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கடலைப் பருப்பு, உளுந்து - தலா ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய மல்லித் தழை - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அடிகனமான வாணலியில் மூன்று டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து கடலைப் பருப்பு, உளுந்து சேர்த்து வறுத்துத் தனியே வையுங்கள். அதே வாணலியில் நீளவாக்கில் அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பிறகு தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்குங்கள்.
ஒன்றரை கப் நீர் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடுங்கள். வெந்ததும் கடலை மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து ஊற்றுங்கள். அனைத்தும் சேர்ந்து வந்ததும் தாளித்த பொருட்களைச் சேர்த்து இறக்கி, மல்லித்தழை தூவி அலங்கரியுங்கள்.
இதை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்றவற்றுக்குத் தொட்டுச் சாப்பிட ஏற்றது. விருப்பப்பட்டால் இறக்கியதும் இந்தச் சட்னியில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு பிழிந்துகொள்ளலாம்.