

என்னென்ன தேவை?
பச்சரிசி - ஒன்றரை கப்
பாசிப் பருப்பு - 2 கப்
உருளைக் கிழங்கு - 2
பச்சை பட்டாணி - கால் கப்
கேரட் - 1
பச்சை மிளகாய் - 3
ஸ்பிரிங் ஆனியன் - சிறிதளவு
நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 2
மஞ்சள்தூள், சீரகம், கடுகு - தலா ஒரு டீஸ்பூன்
தனியாத் தூள் - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து.
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
குக்கரில் நெய்யை ஊற்றிச் சூடானதும் கடுகு, சீரகம் தாளித்து, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்துத் தாளியுங்கள். பிறகு கிராம்பு, பட்டை, ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து வதக்குங்கள்.
கேரட், உருளையை வதக்கியதும் பச்சை பட்டாணி, உப்பு, மஞ்சள் தூள், தனியாத் தூள் பெருங்காயம், அரிசி சேர்த்து ஐந்து கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலந்து மூடிவிடுங்கள். இரண்டு விசில் வந்ததும் இறக்கி, ஆவி வெளியேறியதும் நன்றாகக் கலந்து பரிமாறுங்கள்.
இந்த வெஜிடபிள் கிச்சடியைக் கெட்டியான மோருடன் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.