

என்னென்ன தேவை?
உருளைக் கிழங்கு - 2
பச்சை பட்டாணி, காலி பிளவர் - தலா கால் கப்
குடமிளகாய் - பாதியளவு
தக்காளி - 2
வெங்காயம் - ஒன்று
வெண்ணெய், இஞ்சி-பூண்டு விழுது - தலா ஒரு டேபிள்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பாவ் பாஜி மசாலா - ஒரு டேபிள் ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கசூரி மேத்தி - 2 டேபிள் ஸ்பூன்
கறுப்பு உப்பு - சிறிதளவு
எலுமிச்சை சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான
எப்படிச் செய்வது?
உருளை, பட்டாணி, காலி பிளவர் மூன்றையும் உப்பு சேர்த்து வேக வையுங்கள். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், குடமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கி, இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு காஷ்மீரி மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி வேகவைத்த காய்கறிகளையும் சேர்த்து வதக்குங்கள்.
அதனுடன் கசூரி மேத்தி, பாவ் பாஜி மசாலா தூவி, கறுப்பு உப்பு சேர்த்து இறக்கிவையுங்கள். அதில் எலுமிச்சை சாறு பிழிந்து, மல்லித்தழை தூவி அலங்கரியுங்கள். ஒரு பாவ் பன் நடுவில் வெண்ணெய் தடவி 3 டேபிள் ஸ்பூன் மசாலா வைத்து மூடி தவாவில் போட்டு எடுக்கவும். பிரெட் டோஸ்டரிலும் வைத்து எடுக்கலாம்.