

என்னென்ன தேவை?
மைதா, சர்க்கரை, வெண்ணெய் - தலா 100 கிராம்
பேக்கிங் பவுடர் - 3 கிராம்
வெனிலா எசென்ஸ் - 5 மி.லி.
முட்டை - 2
டூட்டி ஃப்ரூட்டி - 20 கிராம்
அலங்கரிக்க - பட்டர் கிரீம்
எப்படிச் செய்வது?
வெண்ணெய், சர்க்கரை இரண்டையும் நன்றாக அடித்துக்கொள்ளுங்கள். முட்டையை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளுங்கள். மிருதுவான கிரீம் பதம் வரும்வரை அடியுங்கள். இந்தக் கலவையில் மைதா, பேக்கிங் பவுடர், எசென்ஸ் சேர்த்து மிருதுவாகப் பிசையவும். மைதா சேர்ப்பதற்கு முன்புவரை நன்றாக அடிக்கலாம். பிறகு அடிக்கவே கூடாது.
கடைசியாக டூட்டி ஃப்ரூட்டியைச் சேர்த்து மஃபின் கப்களில் பாதியளவு ஊற்றவும். மைக்ரோவேவ் அவன் - ஐ 150 டிகிரி செண்டிகிரேடில் 15 நிமிடம் ப்ரீ ஹீட் செய்யுங்கள். பிறகு 165 டிகிரி வெப்பநிலையில் 20 நிமிடங்கள்வரை பேக் செய்யுங்கள். வெளியே எடுத்ததும் மேலே ஐசிங் கலவையால் டிசைன் வரைந்து பரிமாறுங்கள்.