

என்னென்ன தேவை?
குறுக்கப்பட்ட பால் - 100 கிராம்
பால் - 20 மி.லி.
வெண்ணெய் - 120 கிராம்
சர்க்கரை - 15 கிராம்
மைதா மாவு - 130 கிராம்
பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்
டார்க் சாக்லேட் - 150 கிராம்
பீட்ரூட் - 2
சர்க்கரை (பாகு காய்ச்ச) - ஒரு கப்
எப்படிச் செய்வது?
பீட்ரூட்டைத் தோல் சீவி, துருவிக்கொள்ளுங்கள். ஒரு கப் சர்க்கரையுடன் கால் கப் தண்ணீர் சேர்த்துப் பாகு காய்ச்சுங்கள். துருவிய பீட்ரூட்டை இதில் போட்டு வேகவையுங்கள். பிறகு லேசாக ஆறவிடுங்கள். ஆனால் கெட்டியாகக் கூடாது.
டார்க் சாக்லேட்டை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதைக் கொதிக்கும் நீரில் வைத்து உருக்கிக்கொள்ளுங்கள். உருக்கிய சாக்லேட்டை ஆறவிடுங்கள். வெண்ணெயுடன் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். பிறகு பால், குறுக்கப்பட்ட பால் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். ஆறிய சாக்லெட்டைச் சேர்த்துக் கலக்குங்கள். இப்போது பீட்ரூட் சாறு சேர்த்துக் கலக்குங்கள். மைதா மாவுடன் பேக்கிங் சோடா சேர்த்து சலித்துக்கொள்ளுங்கள். இதை பீட்ரூட் கலவையுடன் சேர்த்து நன்றாகப் பிசையுங்கள். பிசைந்த கலவையை மைக்ரோவேவ் அவனில் 180 டிகிரி செண்டிகிரேட் வெப்ப நிலையில் 25 நிமிடங்களுக்கு பேக் செய்து எடுங்கள். ஒரு முள் கரண்டியை கேக்கினுள் நுழைத்தால் ஒட்டாமல் வந்தால், சரியான பதம் என்று அர்த்தம்.