Last Updated : 14 Dec, 2015 10:03 AM

Published : 14 Dec 2015 10:03 AM
Last Updated : 14 Dec 2015 10:03 AM

ஓமக் கஞ்சி

என்னென்ன தேவை?

புழுங்கல் அரிசி நொய் கால் கப்

ஓமம் 1 டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் ஓமத்தையும் புழுங்கல் அரிசியையும் தனித்தனியாக வறுத்துக்கொள்ளுங்கள். புழுங்கல் அரிசியை ஒரு கப் தண்ணீரில் உப்பு சேர்த்துக் குழைய வேகவையுங்கள். ஓமத்தை மிக்ஸியில் பொடித்து, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடுங்கள். கொதித்ததும் வடிகட்டுங்கள். இந்த ஓமத் தண்ணீரை வேகவைத்துள்ள கஞ்சியில் சேர்த்துப் பரிமாறுங்கள். மோர் சேர்த்தும் குடிக்கலாம்.

வயிறு உப்புசத்தையும் செரிமானக் கோளாறையும் இந்தக் கஞ்சி சீராக்கும்.



Sign up to receive our newsletter in your inbox every day!

 
x