

என்னென்ன தேவை?
காரட், உருளை - தலா ஒன்று
பீன்ஸ், பச்சை பட்டாணி - தலா அரை கப்
சிறிய காளான் - 4
வெங்காயம், தக்காளி - தலா ஒன்று
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
நறுக்கிய மல்லித் தழை - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
மசாலாவுக்கு:
தேங்காய்த் துருவல் - 6 டேபிள் ஸ்பூன்
முந்திரித் துண்டுகள் - 6
பூண்டு - 3 பல்
காஷ்மீரி சில்லி - 3
தனியா, கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்
லவங்கப்பட்டை - சிறு துண்டு
கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
கடல்பாசி - ஒரு துண்டு
எப்படிச் செய்வது?
வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காஷ்மீரி சில்லி, கடலைப் பருப்பு, தனியா இவற்றை வறுத்துத் தனியே வையுங்கள். அதே வாணலியில் மீதியுள்ள எண்ணெயை ஊற்றி வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு கறிவேப்பிலை, பீன்ஸ், உருளை, காளான், பச்சை பட்டாணி, தக்காளி சேர்த்து வதக்கி, ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேகவையுங்கள்.
வறுத்த தனியா, கடலைப் பருப்பு, மிளகாய் இவற்றுடன் மசாலாவுக்கென கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தண்ணீர் ஊற்றி அரையுங்கள். அரைத்த விழுதை கொதிக்கும் கலவையில் சேர்த்து மேலும் ஒரு கொதி வந்ததும் தயிர் சேருங்கள். மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கிவைத்து, மல்லித் தழை தூவிப் பரிமாறுங்கள்.
இந்த குருமாவை சப்பாத்தி, நாண், பராத்தா போன்றவற்றுக்குத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.