

என்னென்ன தேவை?
முட்டையின் வெள்ளைக் கரு - 5
முந்திரி - 170 கிராம்
சர்க்கரை - 300 கிராம்
எப்படிச் செய்வது?
முட்டையின் வெள்ளைக் கருவைத் தனியாகப் பிரித்து எடுத்துக்கொள்ளுங்கள். முந்திரியைச் சற்றுக் கரகரப்பாகப் பொடித்துக்கொள்ளுங்கள். வெள்ளைக் கருவை ஹேண்ட் மிக்ஸரால் மெதுவாக அடியுங்கள். பிறகு சர்க்கரையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து அடித்துக்கொள்ளுங்கள். முட்டைக் கலவை நன்றாக நுரைத்து வந்தவுடன் முந்திரிப் பொடியைச் சேர்த்துக் கலக்குங்கள். இந்தக் கலவையை பைப்பிங் செய்யப் பயன்படும் பையில் போட்டு, பேக்கிங் டிரேவில் கூம்பு வடிவில் அழுத்துங்கள்.
மைக்ரோவேவ் அவன் - ஐ 100 டிகிரி செண்டிகிரேட் வெப்பநிலையில் பதினைந்து நிமிடம் ப்ரீ ஹீட்டில் வையுங்கள். மக்ரூன் கலவையை 120 டிகிரி செண்டிகிரேட் வெப்பநிலையில் பதினைந்து நிமிடங்கள் பேக் செய்து எடுங்கள். டிரேவை வெளியே எடுத்து, இரவு முழுவதும் அப்படியே வைத்தால் நன்றாக செட்டாகிவிடும்.