

சித்தரத்தைக் குழம்பு
என்னென்ன தேவை?
அதிமதுரம், சித்தரத்தை சிறிதளவு
அரிசி திப்பிலி, சுக்கு - சிறிதளவு
மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - ஒரு கப்
பூண்டு 10 பல்
காய்ந்த மிளகாய் 8
புளி எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய், உப்பு தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
அதிமதுரம், சித்தரத்தை, அரிசி திப்பிலி, சுக்கு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை எண்ணெய் இல்லாமல் வறுத்து, பொடித்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பூண்டை நசுக்கிப் போட்டு வதக்குங்கள். பிறகு வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்குங்கள். புளிக் கரைசல், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடுங்கள். கரைசல் நன்றாகக் கொதித்ததும் பொடித்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். மழைக்காலத்துக்கு ஏற்ற இந்தக் குழம்பைச் சுட்ட அப்பளத்துடன் சாப்பிடலாம்.
சளித்தொல்லையைச் சீராக்கும் இந்தக் குழம்பு, உடல் நலக் குறைவுக்கும் ஏற்றது.
- ராஜபுஷ்பா