

என்னென்ன தேவை?
சோள ரவை 1 கப்
சர்க்கரை 2 கப்
முந்திரி, திராட்சை சிறிதளவு
நெய் - தேவையான அளவு
ஏலக்காய்த் தூள் கால் டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
சோள ரவையை வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளுங்கள். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்துக்கொள்ளுங்கள். குக்கரில் இரண்டரை கப் தண்ணீர் ஊற்றிச் சூடானதும் சோள ரவையைச் சேர்த்து குக்கரை மூடி, மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். சூடு குறைந்ததும் குக்கரைத் திறந்து, சோள ரவையுடன் சர்க்கரையைச் சேர்த்து கட்டியில்லாமல் கிளறுங்கள். வாணலியில் நெய் விட்டு, ரவை கலவையைச் சேர்த்து, கேசரி பதம் வரும்வரை சுருள கிளறுங்கள். முந்திரி, திராட்சை, ஏலக்காய்ப் பொடி சேர்த்து இறக்குங்கள். சூடாகச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
- ராஜபுஷ்பா