

என்னென்ன தேவை?
காராமணி - ஒரு கப்
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - சிறு துண்டு
சோம்பு (விரும்பினால்) - ஒரு டீஸ்பூன்
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
காராமணியை நான்கு மணி நேரம் ஊறவையுங்கள். தண்ணீரை வடித்து காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து, கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். மாவுடன் பெருங்காயத் தூள், உப்பு, தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, இஞ்சி, பொடியாக நறுக்கிய வெங்காயம், சோம்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிசையுங்கள்.
பிசைந்த மாவைச் சூடான எண்ணெயில் வடைகளாகத் தட்டிப்போட்டுப் பொரித்தெடுங்கள்.