

என்னென்ன தேவை?
சின்ன வெங்காயம் - 10
பூண்டு 10 பல்
முருங்கைக் காய் - 2
கத்திரிக்காய் 2
சாம்பார் பொடி ஒன்றரை டீஸ்பூன்
மிளகாய்த் தூள், எலுமிச்சை சாறு தலா அரை டீஸ்பூன்
வதக்கி, அரைக்க:
தக்காளி 3
சின்ன வெங்காயம் - 5
மிளகு - அரை டீஸ்பூன்
தாளிக்க :
வெந்தயம் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வதக்கி, அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி, ஆறியதும் அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்குங்கள். பிறகு நறுக்கிய காய்களையும் சேர்த்து நன்றாக வதக்கி, அதனுடன் சாம்பார் பொடி, மிளகாய்த் தூள் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவிடுங்கள். காய்கள் பாதியளவு வெந்ததும் அரைத்து வைத்துள்ள கலவையைச் சேர்த்து கொதிக்கவிடுங்கள். குழம்பு கொதித்து கெட்டியானவுடன் எலுமிச்சைச் சாறு விட்டு, ஒரு கொதி வந்தவுடன் இறக்குங்கள்.
புளி சேர்த்து வழக்கமாக நாம் வைக்கும் புளிக் குழம்பைவிட இந்தக் குழம்பு மிகவும் சுவையுடன் இருக்கும். உணவில் புளி சேர்த்துக்கொள்ளாதவர்கள் இந்தக் குழம்பை ருசிக்கலாம்.
- ராஜபுஷ்பா