அவல் பொரி மிக்ஸர்

அவல் பொரி மிக்ஸர்
Updated on
1 min read

கார்த்திகை மாதத்தின் சிறப்புகளில் தீபங்கள் ஒளிரும் திருநாளும் ஒன்று. அறியாமை இருள் நீங்கி, வாய்மை ஒளி பெருகுவதை உணர்த்தும் கார்த்திகை தீபத்தன்று, வீடுகள்தோறும் விளக்கேற்றுவார்கள். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரருக்கு நெய் தீபம் ஏற்றுகிற அன்று வீடுகளில் கார்த்திகைப் பொரி செய்து படையலிடுவார்கள்.

சிலர் விரதமிருந்து, தினை மாவு சாப்பிட்டு விரதத்தை முடிப்பார்கள். கார்த்திகை தீபத்தன்று செய்யக்கூடிய சில நிவேதனங்களின் செய்முறை குறித்துப் பகிர்ந்துகொள்கிறார் சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த சீதா சம்பத். பாரம்பரிய உணவு வகைகளைச் சமைப்பதில் வல்லவரான இவர், பண்டிகை பட்சணங்கள் செய்வதில் தேர்ந்தவர்.

என்னென்ன தேவை?

அவல் பொரி - 2 கப்

பொட்டுக்கடலை, வேர்க்கடலை - தலா கால் கப்

தேங்காய் கொப்பரைத் துண்டுகள் - கால் கப்

முந்திரிப் பருப்பு - 10

திராட்சை - 2 டீஸ்பூன்

எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் - தலா கால் டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

அம்சூர் பொடி - கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், பெருங்காயம் போட்டு வறுத்தெடுங்கள். அதனுடன் அவல் பொரி, உப்பு சேர்த்து, தனியே எடுத்துவையுங்கள். அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு முந்திரி, திராட்சை, கடலை வகைகளை வறுத்தெடுங்கள். பிறகு கறிவேப்பிலை, கொப்பரைத் துண்டுகள் ஆகியவற்றை வறுத்து, பொரி கலவையில் சேருங்கள்.

ஆம்சூர் பொடியைத் தூவி, பரிமாறுங்கள். சுவையான அவல் பொரி மிக்ஸர் தயார். மகாராஷ்டிரத்தின் சுவைமிகு நொறுக்குத்தீனி வகைகளில் அவல் பொரி மிக்ஸரும் ஒன்று. இந்த மிக்ஸரை அவர்கள் சிவ்டா என்று சொல்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in