

என்னென்ன தேவை?
தினை மாவு - ஒன்றரை கப்
வெல்லம் - முக்கால் கப்
ஏலக்காய்ப் பொடி - அரை டீஸ்பூன்
முந்திரி - 10
நெய் - 5 டேபிள் ஸ்பூன்
எப்படிச் செய்வது?
பச்சை வாசனை போகும்வரை தினை மாவை வறுத்தெடுங்கள். அதனுடன் வெல்லத் தூள், ஏலக்காய்ப் பொடி சேர்த்துக் கலக்குங்கள். முந்திரியை நெய்யில் வறுத்து மாவில் கலந்துவிடுங்கள்.
மீதமுள்ள நெய்யைச் சூடாக்கி, மாவு கலவையில் ஊற்றி, உருண்டை பிடியுங்கள். விளக்குபோலச் செய்தும் அலங்கரிக்கலாம்.